காலத்தின் கோலத்தில் வண்ணம் மட்டும் இல்லை!
பொதுவா அப்பாக்கள் அக்கா,தங்கை மகளை முறைப்பெண்ணாக மகனுக்கு மணம் முடித்து வைத்து அவளை வீட்டு மருமகளாக்கி,தாய்மாமன் உறவை தன் வம்சத்தோடு தக்க வைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதே போல் அம்மாக்களோ தங்கள் அண்ணன்,தம்பி மகளை தன் வீட்டு மருமகளாக்க மெனக்கெடுவார்கள். அதன் மூலமும் தாய்மாமன் உறவை தக்க வைத்துக் கொள்ள கணவனோடு சண்டை போட்டு எந்த எல்லை வரைக்கும் கூட போவார்கள். இதில் பெரும்பாலும் ஜெயிப்பது அம்மாக்கள் தான். அம்மா வழி தாய்மாமன் உறவு பெண்களைத் …