திரும்ப திரும்ப சுழலும் பாகம் 8
சென்ற பகுதியின் தொடர்ச்சி… செவலையை மீண்டும் பார்த்த தேன்மொழிக்கு பார்த்த நொடி குப்பென்று வியர்த்துவிட்டது. தான் கண்டது கனவாக இருந்தாலும் அதில் இருப்பது போல நடப்பது ஆச்சரியமாக இருந்தாலும் அதே சமயம் அடுத்து கனவில் நடந்தது மாதிரி நடந்தால் என்ன செய்வது என பயமாகவும் குழப்பமாகவும் இருந்தது. தனக்கு கனவில் வந்த மாதிரி எதுவும் நடக்கிறதா என தெரிந்து கொள்ள செவலையிடம் “டே செவலை நீ எங்கன காலையில வயலு பக்கம் வந்திருக்க?” கேட்க “அது ஒன்னுமில்லம்மா …